சிறிலங்கா கடற்படையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மரைன் படைப்பிரிவுக்கு, அமெரிக்க கடற்படையின் மரைன் படைப்பிரிவினர் திருகோணமலையில் பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

இந்த மூன்று நாள் சிறப்புப் பயிற்சிகள் நேற்று ஆரம்பமாகியிருந்தன.

திருகோணமலைத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துக் கப்பலான யுஎஸ்எஸ் சோமசெற்றில், உள்ள அமெரிக்க மரைன் படையினரின் போர்த்தளபாடங்கள், வாகனங்கள் இந்தப் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

உலங்குவானூர்திகளில் இருந்து தரையிறக்கும் பயிற்சிகளும், ஈரூடக போக்குவரத்து வாகனமான ஹேவர்கிராப்ட் மூலம் கவசவாகனங்கள், படையினரைத் தரையிறக்கும் பயிற்சிகளும் நேற்று அளிக்கப்பட்டுள்ளன.

யுஎஸ்எஸ் சோமசெற் கப்பலில் வந்துள்ள, அமெரிக்க கடற்படையின் 11 ஆவது மரைன் நடவடிக்கை படைப்பிரிவு இந்தப் பயிற்சிகளை வழங்கி வருகிறது.

fb_img_1480149084827

fb_img_1480149081702 fb_img_1480149078549 fb_img_1480149075475 fb_img_1480149073043