எஸ்போ நினைவேந்தலும் நூல் வெளியீடும்

” கட்டடக்காடு”  நாவல், உட்டபட நான்கு பூவரசி வெளியீடுகள்  எஸ்போ நினைவேந்தல் நிகழ்வில் சென்னை மைலாப்பூரில் அறிமுகம் .
image3 image2 image1
” கட்டடக்காடு ” என்ற நாவல்  2014 இல் வெளியாகியது .  இன் நாவல் தென்னமெரிக்க அமேசன் நதி  , இந்திய ஈழத்தமிழர் வாழ்க்கை ஓட்டம் , பாக்கு நீரிணை ,ஈழத்தின் வன்னி வாழ்வியல் என பரந்து விரியும் ஒரு புதுமையான சித்திரம். மேலும் இது  புதிய களத்தில் உருவாகிய வித்தியாசமான நாவல் என்றும் விறுவிறுப்பான ஆங்கில திரைப்படத்திற்கான நாவல் என்றும்  பேசப்பட்டதோடு  2014 ஆண்டின் வடமாகாண சிறந்த நூல் விருதையும்,  இலங்கை கொடகே தேசிய சாகித்திய விருதையும் பெற்றுக்கொண்டது.மேலும் இதே நாவலாசிரியரின்  இரண்டாவது படைப்பான ” பாவு தளிர் தூவு வானம்” சிறுகதைக் கொத்து 2015 ஆம் ஆண்டுக்கான   அதி உயர் விருதான  அகில இலங்கை தேசிய சாகித்திய விருதினை பெற்றதுடன் இலங்கைத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் சிறந்த படைப்பு எனவும் பாராட்டப்பட்டது. இப் படைப்புக்களை எழுதிய எழுத்தாளர்  ” புதிரானவை பேசும் பசுந்திரா சசி   ஈழ இலக்கியத்திற்கு ஒரு நல் வரவு ” என  சாகித்திய ரத்தினா விருது பெற்ற மூத்த எழுத்தாளர் தெளிவத்தை யோசப் அவர்கள் கூறியிருந்தார் . மறைந்த யாழ் சிற்பி சிவசரவணபவன் அவர்களினால் எழுத்துலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட  இவரின் மேற்படி இரு நூல்கள் உட்பட நான்கு நூல்கள்  ஈழவாணி இன் பூவரசி பதிப்பக வெளியீடாக  மார்கழித் திங்கள் மூன்றாம் நாள். 03/12/16 அன்று சென்னை மயிலாப்பூரில்  உள்ள கவிக்கோ மன்ற அரங்கில் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் தலைமையிலான மூத்த படைப்பாளி எஸ்போ அவர்களின் நினைவேந்தில் நிகழ்வில்  வெளியிட்டு வைக்கப்பட்டு உரைகளும்  நிகழ்த்தப் பட உள்ளன.  இந்நிகழ்வில்  கவிஞர்களான சல்மா , உதயம் சூரியா , வெய்யில் , யுவனிகா ஶ்ரீராம். நட சிவகுமார் உட்பட எழுத்தாளர்கள்  திரை கலைஞர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார். இன் நிகழ்வில் பூவரசி பதிப்புகளான பேராசிரியர் செல்வகுமாரனின் “உலுப்புகளின் திசை ” கவிஞர் வஸீலா ஸாஹிரியின் ” மொழியின் மரணம் ” ஆகிய  நூல்களும் வெளியிடப்பட உள்ளது.  பிரபல எழுத்தாளர்கள் , கவிஞர்கள் , திரை இயக்குனர்கள் பாரதி கிருஷ்ணகுமார் , மீரா கதிரவன்  ,போன்றோர் மறைந்த எழுத்தாளர் எஸ்போ நினைவுகள் மற்றும் பூவரசி பதிப்புகள் குறித்து உரை நிகழ்த்த உள்ளனர் .