fb_img_1480377754660

எங்கள் தமிழுக்காக தமிழ் மண்ணுக்காக மடிந்தவர்களை நினைவுகூரவேண்டியது தமிழ்மக்களின் தலையாய கடமையாகும் என மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பாக தகது முகநூலில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

அக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

மாவீரன் சிவகுமாரன் தொடக்கிய பணியில் பல்லாயிரக்கணக்கான மைந்தர்கள் இந்த மண்ணுக்காக மடிந்து போனார்கள். என்னைப் பொறுத்தவரையில் எந்த இயக்கத்தில் இருந்து மடிந்தாலும் அவர்களை நாம் நினைத்துத்தான் பார்க்க வேண்டும். இதில் வேறுபாடுகாட்டுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

1983ம் ஆண்டு அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்ட பேது உணர்வு மிக்க இளையோர் தங்களை போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்கள். அவர்கள் இணைகின்ற பொழுது மேலோங்கிய உணர்வும் வெறியும் இருந்ததே ஒழிய அவர்களால் போராட்ட இயக்கங்களை பகுத்துணரும் அறிவு அவர்களிடம் இருக்கவில்லை.

ஆரார் முந்தி ஏற்றினார்களோ அவரகளுடன் அணி திரண்டார்கள். அனைவரையும் வரவேற்ற இந்திய அரசு அனைவரையும் தனது கைப்பொம்மைகளாக வைத்துக்கொண்டு பிரித்தாளும் தந்திரத்தை கச்சிதமாக செயற்படுத்தியது. அனைவருக்கும் ஆளாள் தெரியாமல் பயிற்சியை வழங்கியதும் இல்லாமல் ஆயுதங்களையும் வழங்கியது.

இதுபோன்ற சதிவலைக்குள் சிக்குண்ட தலைமைகள் தங்களுக்குள்ளையே குரோதங்களை வளர்த்துக்கொண்டு தேவையற்ற பகைமைகளை வளர்த்துக்கொண்டார்கள்.அதிகாரப்போட்டி தலைமைத்துவத்தை தக்க வைத்தல் தனித்துவத்தைப் பேணுதல் என்ற அகங்கார போக்கில் தேவையற்ற சதிவலைக்குள் சிக்குண்டு தங்களுக்குள்ளையே அழிவுகளை ஏற்படுத்தினார்கள்.

விளைவு பல கனவுகளுடன் எதிரியை அழிக்க வேண்டும் என்று உலாவந்த ஏதும் அறியாத பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வீணாக மடிந்து போனார்கள்.ஆனால் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் இலட்சியம் ஒன்றாகவே இருந்தது.

இதனால்தான் நாம் அனைவரும் சேர்ந்து அனைத்து வீரச்செல்வங்களையும் நினைவுகூரவேண்டும். இதில் வெற்றி பெற்றவர்கள் இந்திய அரசே தவிர நமது தலைவர்கள் அல்ல.

ஆரம்பத்தில் ஒன்றாக சேர்ந்து போரிட்டிருந்தால் வடகிழக்கையல்ல முழு இலங்கையையுமே பிடித்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செயற்பட்டு தனிநாடு எடுப்பதை இந்தியா விரும்பவில்லை.அதே போன்று தமிழர்கள் ஒன்றாவதையும் இந்தியா விரும்பவில்லை.

ஆனால் அதன் விளைவு நம்மிடையே பிளவுகளும் வீண் குரோதங்களும் ஆளாளை துரோகி என்பதும் மிஞ்சியதே தவிர வேறொன்றுமில்லை.

இதை விட வேடிக்கை, யார் யார் மாவீர்ர் நிகழ்வு நடத்த வேண்டும் என்பதில் பிரான்சில் வாள்வெட்டு, இதைவைத்து நிதி வசூலிப்பதில் பல கும்பல்கள், வடகிழக்கிலே குறுகிய அரசியல் இலாபம் தேடுவதற்காக பல புல்லுருவிகள் என்று பல விடயங்களை நாம் எமது கண்முன்னே காண்கின்றோம்.

போராட்ட காலத்தில் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பியோடிய பச்சோந்தி அரசியல்வாதிகள், தற்போது வீர மறவர்களின் பட்டியலை வெளியிட்டு முதலைக்கண்ணீர் வடிக்கின்றார்கள்.

இன்று இலங்கையில் மேலோங்கிவரும் இனவாத அரசியலில் குறுகிய இலாபம் அடைய மக்களை தூண்டுவதில் சில அரசியல் தலமைகள் ஈடுபடுவதையிட்டு வெட்கப்பட வேண்டியுள்ளது.

அண்மையில் மட்டக்களப்பில் இடம்பெற்று வரும் விடயங்கள் அவ்வளவு ஆரோக்கியமானதாக அமையவில்லை.ஒரு அரச அதிகாரியை பிக்கு தாக்கினால் இது பொதுப்பிரச்சனை. அனைத்து அரச அதிகாரிகளும் வீதியில் இறங்க வேண்டும், அந்தளவிற்கு ஒற்றுமை உங்களிடத்தில் உள்ளதா என்பதை முதலில் சிந்தியுங்கள்.

இன்று ஏற்பட்டுள்ள உலக மாற்றம் எமக்கு அவ்வளவு சாதகமாக அமையவில்லை. அரபு நாடுகளின் யுத்தம், அமெரிக்க அதிபரின் வரவு, மகிந்த – சீனாவின் உறவு என்பவை கூடிய தாக்கம் செலுத்தலாம்.

இதுபோன்ற காலகட்டத்தில் நாமும் ஆளாள் பிரிந்து ஆறிவரும் புண்ணை மீண்டும் புரைக்க வைப்பதில் பலன் ஏதும் வரப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

கார்த்திகை 27இல் இவரின் மன மாற்றம் பலராலும் காலம் கடந்த அல்லது தேவையற்ற மாற்றம் என பலரும் கூறுகின்றனர்….