புலிகளை நினைவுகூர்ந்தோரை உடனடியாக கைது செய்யுங்கள் (க.கமலநாதன்)!!!

fb_img_1480415288108
யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதாக தெரிவித்து வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களின் முன்பாக புலிகளின் பதாதைகள் ஏந்திக்கொண்டு புலிகள் நினைவு கூரப்பட்டுள்ளனர். இது இனவாதத்தினை வலுவாக்கும் செயற்பாடாகும். எனவே வடக்கில் இவ்வாறு புலிகளை நினைவு கூர்ந்தவர்களுக்கு எதிராக பொலிஸ்மா அதிபர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 157 ஆ. சட்டமூலத்திற்கு அமைவாக பிரிவினை வாதத்தினை தூண்டுவது தவறான செயற்பாடாகும். எனவே மேற்குறித்த செயற்பாடுகளை முன்னெடுத்தவர்களை சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.