கடும் போட்டிகளுக்கு மத்தியில் பல வருடங்கள் தொடர்ந்தும் மேற்கொண்ட கடும் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக, எனது இலக்கும் கனவும் உண்மையாக மாறியதையிட்டு நான் உண்மையில் மகிழ்ச்சியடைகின்றேன்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் எயார் பஸ் ஏ 320 விமானத்தின் முதல் விமானி பதவி எனக்கு கிடைத்துள்ளது.

இலங்கையின் தேசிய கொடியை நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் ஒரே யாழ்ப்பாண தமிழன் என்ற வகையில் எனக்கு புதுமையான மகிழ்ச்சி ஏற்படுகிறது.

எனது இந்த பயணத்திற்கு எனக்கு ஆதரவு வழங்கிய எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

நீண்டகாலத்திற்கு முன்னர் உங்களில் பலரை நான் விரைவில் வானில் சந்திப்பேன் என்று நம்புகிறேன் என தயாளன் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் பகிர்ந்து இவரின் சாதனையை நீங்களும் ஒரு தடவை பாராட்டிடலாமே…