தடுப்பு முகாமில் உள்ள அகதிகளின் விடுதலையை நோக்கி தமிழ் அகதிகள் ஒன்றினைந்து மாபெரும் போராட்டம்

பிரித்தானியாவில் அகதிகளின் உரிமைகள் மற்றும் Movement of justice எனும் அமைப்புக்கள் இணைந்து கைதிகளாக தடுப்பில் உள்ள அகதிகளின் விடுதலைக்காகவும் தடுப்பு முகாம்களை மூடுமாறு கோரிக்கைக்களை முன்னிறுத்தி ஏராளமான மக்களுடன் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது.

இப்போராட்டமானது வருகின்ற டிசம்பர் 3ஆம் திகதி , சனிக்கிழமை யார்ல்ஸ்வூட்டு அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல அகதிகளை வெளியே விடவேண்டும்.

பிரித்தானியா யார்ள்ஸ்வூட்டு அகதிகள் தடுப்பு முகாமில் அதிகமான பெண் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் பல வன்முறைகளை சந்தித்துள்ளதுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பல முறை எதிர்பு ஆர்பாட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் எந்த வித கவணத்திணையும் செலுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போராட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.