இலங்கையில் “நாடா புயல் ” ; கடலோர மக்களுக்கு எச்சரிக்கை!!!

வங்காள விரிகுடாவில் குடிக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ் அமுக்கம் தற்போது புயலாக மாற்றமடைந்துள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த புயலிற்கு ‘நாடா’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த புயல் முல்லைத்தீவில் இருந்து சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் மையங்கொண்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மன்னாரில் இருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரை கடற்கரைக்கு அப்பால் கடற்பிரதேசங்கள் கொந்தளிப்புடன் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், கடற்கரைக்கு அருகில் சுமார் 3 மீற்றர் உயரம் வரை அலைகள் எழும்பி கரையை தாக்கக்கூடும் என்பதால் கடலோர மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பொது மக்களிடம் வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.