சாவகச்சேரிப் பகுதியில் மரமொன்று முறிந்து விழுந்ததால் அலுவலகத்திற்கு கடைமைக்காக சென்று கொண்டிருந்த கஜந்தன் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பகுதியில் வீசிவரும் சச்சிதானந்தம் கஜந்தன், முகவரி சப்பச்சிமாவடி சாவகச்சேரி .வயது 31, தாமோதரம் பிள்ளை வீதி.
என்பவரே பரிதாபமாக உயிரிழந்தவராவர்.

பலத்த காற்றின் காரணமாகவே குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

 

2016-12-01-13-35-502016-12-01-13-35-20

சூறாவளி காரணமாகப் பல இடங்களிலும் பயன்தரு மரங்கள் பல முறிந்து விழுந்துள்ளன.அத்துடன் யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இலங்கையின் திருகோணமலையிலிருந்து 720 கிலோ மீற்றர் தொலைவில் வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மையம் யாழ்ப்பாணத்தை நோக்கி நகர்ந்து வருவதாக இலங்கையின் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலையில் இருந்து கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவுகின்றதாகத் தெரியவருகின்றது. இன்று காலை தெருவில் போகமுடியாத அளவுக்கு கடும் குளிர் நிலவியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதே வேளை காற்றுடன் கூடிய மழை குடாநாட்டில் பெய்து கொண்டிருப்பதாக தெரியவருகின்றது