“மக்கள் பாவலர்” என அழைக்கப்படும் கவிஞர் இன்குலாப் இன்று காலமானார்…

♪ ஏழுகடல்களும் ஆடட்டும் இனி எட்டாத வானமும் கிட்டட்டும் என்ற பாடல்வரிகள் தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் பட்டி தொட்டி எங்கும்ஒலித்த ஞாபகம் வருகின்றதா?
இப்பாடலுக்கு சொந்தக்காரன் தான் இந்த மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்கள் தான்.

கவிஞர் அமரர் இன்குலாப் அவர்கள் இனன்று சாவினைத்தழுவிவிட்டார் என்பனதை வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

இவருடைய’நாங்கமனுஷங்கடா’,கண்மணி ராஜம், மீட்சி, சூரியனை சுமப்பவர்கள்போன்ற படைப்புகள் காலத்தால் அழியாதவை.கவிஞர் இன்குலாப் அவர்களைப் பற்றி, இன்றைய தலைமுறையினர் அறிவார்களா ?எனத் தெரியாது….ஆனால், பின் வரும் தலைமுறைகளுக்கும், அவர் நிறைய எழுதியுள்ளார்…..நாம் தான் அவற்றை கொண்டு செல்ல வேண்டும்…
அடிமை இருளை அழிக்கப் பிறந்தவன்/போகும் வழியெல்லாம் / கிழக்கும் பின் தொடரும். என்று `கிழக்கும் பின் தொடரும்’ என்ற கவிதைத் தொகுப்பில் எழுதினார்..
பாவலர் அவர்களின் புலிகள் குறித்த “சுட்டுவிரல்” என்னும் கவிதைஇந்தியா பல்கலைக்கழகத்தின் தமிழ் பாடத்திட்டத்தில் உள்ளது.