யாழ் நகரிலும் ஏ9 வீதியிலும் பெண்களும் ஒரு சில ஆண்களும் புதுவகையாக யாசகம் செய்கின்றனர் .துண்டுப்பிரசுரத்தை நீட்டி..
அதாவது பயணிகள் பேரூந்துகளில் ஏறி பயணம் செய்யும் பயணிகளிடம் தம்முடன் எடுத்துவரும் துண்டு பிரசுரத்தை நீட்டி பணம் பெறுகின்றனர்.
அத் துண்டுப்பிரசுரங்களில் தமக்கு அல்லது தமது குடும்பத்தினருக்கு நோய் என்றும் அதற்கானமருத்துவ செலவுக்கு எனக்கூறி யாசகம் (பிச்சை) எடுக்கின்றனர்.
இப்படி யாசகம் செய்வோரில் பலர் மது போதையில் நகரில் மக்களுக்கு இடையூறறு செய்வதுடன் கெட்ட வார்த்தைகளை மபசுவதுண்டு.
ஏ9வீதியில் பயணிக்கும் பேரூந்துகளில் ஏறி யாசகம் செய்வோர் 25வயதிற்குட்பட்டவர்களே கூடுதலானோர்.
மேலும் தென்பகுதியை சேர்ந்தோர் என்பது குறிப்பிடத்தக்கது…..
நன்றி