பொறுமை காத்து வந்த அரசு தற்போது அதிரடியாக பல முக்கிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் கைது ஆபத்து இருப்பதாகவே கூறப்படுகின்றது.

இதன் படி இன்றைய தினம் கோத்தபாய கைது செய்யப்பட இருந்ததாகவும், எனினும் உயர்மட்டத்தில் இருந்து விடுக்கப்பட்ட உத்தரவின் பேரில் அவர் கைதில் இருந்து காப்பாற்றப் பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த சந்தேகம் நேற்று பொலிஸ் மா அதிபருக்கு வந்த மர்ம நபரின் தொலைபேசி அழைப்பின் ஊடாக மேலும் வலுப்பெற்றது.

நேற்று பொலிஸ் மா அதிபர் மேடை ஒன்றில் உரை நிகழ்த்த தயாராக ஒலி வாங்கிகளுக்கு முன் சென்றுள்ளார். அதே நேரம் அவருக்கு அவசர தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது,

பின்னர் பொலிஸ் மா அதிபர் தொலைபேசியில் உரையாடுவது தெளிவாக காணொளிகளில் பதிவாகியுள்ளது. அதில்,

வணக்கம் சேர்….., அவசரமான விடயம் ஏதாவதா சேர் …. இல்லை…. நிதி மோசடி விசாரணை பிரிவின் பணிப்பாளரிடம் சொல்லியுள்ளேன்….., அதனை நான் கேட்டுள்ளேன் கட்டாயமாக எனக்கு கிடைக்கும்…., அவற்றினை எடுத்துக் கொண்டு நான் சந்திக்கின்றேன்…,

ஆம் வரச்சொல்லி இருக்கின்றார்கள் சேர்……, இல்லை அப்படி நடக்க சாத்தியம் இல்லை நான் ஏற்கனவே கேட்டுவிட்டேன்….,

நிச்சயமாக நான் கூறுகின்றேன் சேர்……, அவர் கைது செய்யப்படப் போவதில்லை……, நிச்சயமாக கூறுகின்றேன்…, அவர் கைது செய்யப்படப்போவது இல்லை…..,

நான் தெளிவாக பணிப்பாளரிடம் கூறியுள்ளேன் என்னிடம் கேட்காமல் கைது செய்ய வேண்டாம் என… கைது செய்யப்பட மாட்டார் என்பது நிச்சயம் சேர்…, நன்றி நான் பின்னர் அழைக்கின்றேன்….,

இவை தொலைபேசி அழைப்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பேசிய வார்த்தைகள்.

இவரது உரையாடல்த்த கோத்தபாய ராஜபக்சவை மையப்படுத்தியே நடைபெற்றிருக்கலாம் என கருத்துகள் வெளியிடப்படுகின்றது.

அதே சமயம் வார்த்தைக்கு வார்த்தை இவர் போட்ட சேர் மூலம் உயர் மட்டத்தில் இருக்கும் ஒருவரே அழைப்பினை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்பதும் தெளிவாகின்றது.

இதேவேளை நேற்றைய தினம் இவர் கைது செய்யப்படலாம் என்ற செய்திகள் ஊடகங்களில் பரவலாக வெளிவந்தன. அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் கோத்தபாய நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தார்.

அதேபோன்று “கோத்தபாயவை கைது செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டு விட்டன, அதனால் கொழும்பு நீதிமன்றத்திற்கு முன் அனைவரும் ஒன்று திரள வேண்டும்” என நேற்று செய்திகள் பரப்பப்பட்டன என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கதாகும்.

ஆக கோத்தபாயவின் கைது ஏற்கனவே திட்டமிடப்பட்டு விட்டது. எனிலும் இறுதி தருணத்தில் அது மாற்றம் பெற்று விட்டதாகவும் கூறப்படுகின்றது.

தென்னிலங்கையில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த கைதும் அரசின் அடுத்த அரசியல் சதுரங்க காய் நகர்த்தலின் ஓர் அங்கமாகவே விமர்சிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்தக் கைதின் பின்னணியில் அரசிற்கு எதிரானவர்களை குறி வைத்து அகற்றுவது, மற்றும் இராணுவப்புரட்சியை அடக்குவது, போர்க்குற்றம் தொடர்பில் வெளிப்படுத்துவது போன்றனவும் இருக்கின்றது என்றே கூறப்பட்டு வருகின்றது.

இங்கு இராணுவப் புரட்சி என்ற வார்த்தையின் அடித்தளம் மஹிந்த தரப்பினரே என்ற அடிப்படை வாதமே இப்போதைய தென்னிலங்கைச் சூழலில் இருந்து வருகின்றது.

அதேபோன்று மஹிந்தவின் செயற்பாடுகளுக்கு கோத்தபாயவே மூலம், என்ற வகையிலும் கருத்துகள் காணப்படுகின்றன. இதன்போது கோத்தபாய கைது செய்யப்பட்டு விட்டால் மஹிந்த தரப்பு அடக்கப்பட்டு விடும் என்பதே அரசின் திட்டம்.

அத்தோடு நாட்டில் அரசுக்கு எதிரான அனைத்தும் அடங்கிப்போய் விடும் என்பதும் ஒருவகையில் சாத்தியமான ஒன்றாகவே நோக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே கோத்தபாயவை கைது செய்ய அரசு திட்டமிட்டு பின்னர் அது உயர் மட்ட தலையீடுகளால் காப்பாற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எது எவ்வாறாயினும் அரசு தனது அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்தவும், நாட்டில் நிலவிவரும் குழப்பங்களை நீக்கி சர்வதேசத்தின் நன்மதிப்பை பெற்றுக்கொள்ளவும் தென்னிலங்கையில் முக்கிய புள்ளிகளின் கைதுகள் நடத்த வேண்டியது அவசியம்.

அந்தப் பட்டியலில் கருணா, கோத்தபாய, கமால் போன்றவர்கள் வரிசையில் இருப்பதாகவும் விரைவில் இவர்களுக்கும் கைது ஆபத்துகள் இருப்பதாகவும் தென்னிலை புத்திஜுவிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.