யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 5 இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

fb_img_1480844620958 fb_img_1480844618357 fb_img_1480844615274

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 வாள்கள், வாள்வெட்டுக்கு தயாராகும் புகைப் படங்கள், வீடியோக்கள் அடங்கிய கையடக்க தொலைபேசி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் முயற்சியில் விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சுன்னாகம், உரும்பிராய், திருநெல்வேலி, கோப்பாய் பகுதிகளை சேர்ந்தவர்கள் கைது செய்ப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிரபல தனியார் பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்பவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 வாள்கள், 1 மோட்டார் சைக்கிள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதுடன், ஐபோன் கையடக்க தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசியில் வாள்வெட்டுக்கு தயாராகி வாள்களுடன் நிற்கும் புகை படங்கள், வீடியோ பதிவுகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.