சிறிய விடயத்தை அரசாங்கமும் பொலிஸாருமே ஊதி பெரிதாக்கியுள்ளனர்..

screenshot_20161204-102801எமது வாலிபர்கள் ஆபத்துக்கு மத்தியில் உள்ளனர் அனைத்து பௌத்தர்களும் மட்டகளப்புக்கு வாருங்கள் : சுமனரத்ன தேரர் அழைப்பு …

மட்டக்களப்பில் இடம்பெறவிருந்த விசேட பூஜைக்காக இணைந்து கொள்ள வந்தவர்களின் பிரயாணத்தை மறித்து தமக்கும் நகரில் கட்டுப்பாடுகளை உருவாக்கி பூஜையைக் குழப்பியதன் மூலம் அமைதியாக இடம்பெறவிருந்த ஒரு நிகழ்வை அரசாங்கம் ஊதிப் பெருப்பித்துள்ளதாக சுமரத்ன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாளை விகாரைக்குள் வருவதற்கும் பொலிசார் எவ்விதமான எதிர்ப்பைக் காட்டப் போகிறார்கள் எனத் தாம் பார்க்கவுள்ளதாகவும் அமைதியாக இடம்பெறவிருந்த நிகழ்வு தற்போது இனவாத நிகழ்வாக பூதாகரமாக்கப்பட்டுள்ளதாகவும் சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நோக்கி வந்த வாலிபர்கள் ஆபத்தில் இருப்பதாகவும் நாட்டில் உள்ள அனைத்து பௌத்தர்களையும் மட்டக்களப்புக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்…