ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலரின் கடைசி நிமிடம்…

fb_img_1481019144984ஜெயலலிதாவுக்கு எத்தனை செக்யூரிட்டிகள் இருந்தாலும், கருப்புப்படை பாதுகாவலர்கள் இருப்பினும் கூட, புறப்படுவதற்கு முன் வந்தாரா அப்பு என்று செல்லமாக ஒரு பாதுகாவலரைப் பற்றி விசாரிப்பார்.

அவர் எங்கு பயணம் மேற்கொண்டலும் கிலோ மீட்டர் கணக்கில் அவரது காரில் தொங்கிக்கொண்டு செல்லும் பிராதன பாதுகாவலர் தான் அவர்.
அவர் தமிழக காவல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஆவார்.

எத்தனை உயர் அதிகாரிகள் இருந்தாலும் இந்த குறிப்பிட்ட காவல் பாதுகாவலருக்கு மட்டும் அம்மா அங்கிகாரம் அளித்து வைத்திருந்தார்.

முதல்வருக்கு மிகவும் நம்பிக்கையான அவர் நிகழ்ச்சி மேடைக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திலேயே மேடத்தின் காரில் இருந்து இறங்கி வண்டிக்கு பக்கத்தில் ஓட்டமாக ஓடிவருவார்.

அம்மாவின் நம்பிக்கைக்குரிய அந்த செல்ல அப்பு, இன்றைக்கு முதல்வரின் கடைசி பயணத்துக்கான கடைசி பணியை சோகத்தோடு மேற்கொண்டிருக்கிறார்.