பாதீனியயம்செடி விசத்தமை வாய்ந்தது.

fb_img_1481074818548பாதீனியயம் செடியானது இந்தியாவில் இருந்து 1987ம் ஆண்டு எமது தாயகப் பகுதிகளிற்கு பரம்பல் ஏற்பட்டு தீவகம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தாராளமக வும் சுகந்திரமாகவும் வளர்ந்து வரும் செடித்தாவரம் ஆகும். இதுசுமார் மூன்றடி உயரம் வரையில் வளர்ச்சியுடைய தாவரம்.

இத்தாவரம் வளர்வதற்கு சிறியளவு நீர் போதும் .இத்தாவரம் வளரும் நிலத்திலுள்ள மண்வளம் பாதிக்கப்படுவதுடன் அவ் நிலத்தில்பயிரிடப்படும் பயிர்க் கொடியோ அல்லது அன் நிலத்தில் நிற்கும்.ஏனைய தாவரங்களோ பாதீனியம் செடியால் வளர்ச்சியால் பாதிக்கப்படுகினறன. அது மட்டுமல்லமனித இனத்துக்கும் பல பாதிப்புக்களை கொண்டது.
இத்தாவரம் 1987ம் ஆண்டுக்கு பின்னர் தான் எமது தாயகப்பகுதிகளில் காணப்பட்டது. அதாவது இலங்கைக்கு அமைதிப்படையென்ற போர்வையில் வந்த இந்தியா இராணுவத்துடன் அவர்களின் உணவுத் தேவைக்காக கொண்டு வரப்பட்ட கால்நடைகளால் பரப்பப்பட்டது .அதாவது இந்தியாவிலிருந்து வந்த கால்நடைகள் (இந்தியாவில் இருந்தபோது )உணவாக இந்த பாதீனியம் செடியை உட்கொண்டன.இதனால் எமது பகுதிகளில் அக்கால்நடைகளின் கழிவுகளாலூம் எருக்கழிவுகளினாலும் உற்பத்தியாகிய செடிகளில் முதன்மையானது.
பாதீனியம் செடிகள் ஆரம்பத்தில் இந்தியா இராணுவத்தினரின் கால்நடைகளை பாதுகாப்பாக அடைக்கப்பட்ட பட்டிகள் இருந்த நிலங்களில் தான் உருவாகியது. பின்னர் அக் கால்நடைகளை மேச்சலுக்கு விடப்பட்ட நிலங்களில் வளர்ச்சி கண்டது .குறிப்பாக எமது விவசாய நிலங்களில் பாதீனியம் படர்ந்து வளர்ச்சி கண்டது. இத்தாவரத்தின் பூக்களானது மிகச்சிறியது. அதாவது எமது வீடுகளில் வடிவிற்காக வளர்க்கப்படும் செவ்வந்தி வாடா மல்லிகை(சிறியது) போன்ற பூக்களி்ன் தோற்றத்தைப் போல் காட்சி தருவது போன்ற சிறிய வெண்ணிறமான பூக்களையுடையது.

ஒரு தாவரத்தில் நூறு தொடக்கம் நூற்றி இருபத்தி ஐந்துவரையில் பூக்கள் காணப்படும் .பாதீனியத்தின் பூக்களே விதையாகும் .இப்பூவிதையின் மூலமே இத்தாவரத்தின் இனப்பரம்பல் விரைவாக நடைபெறுகின்றது.
மேலும் இப் பூக்கள் காய்ந்து வெடித்து பறப்பதன்மூலமோ அல்லது கால்நடைகள் இத் தாவரத்தை உட்கொள்வதனால் மலக்கழிவு மூலமாகவோ.மழை வெள்ள நீர் மூலமாகவோ கூடுதலான இடங்களில் இனப்பரம்பல் ஏற்படுகின்றது.
ஓரு பூவில் குறைந்தது ஆயிரம் வரையான விதைகள் உள்ளன.அதாவது ஒரு தாவரத்தில் குறைந்தது இருபதாயிரம் விதைகள்
காணப்படுகின்றன.
எமது பகுதியில் இத் தாவரமானது தீவகம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் காணப்படுகின்றன. குறிப்பாக தோட்ட நிலங்கலுள்ள கோப்பாய் பிரதேசம் சுண்ணாகப் பிரதேசம் மானிப்பாய் பிரதேசம் வடமராட்சி பிரதேசம்
கீரிமலை .தெனன்மராட்சி பிரதேசம் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகள்
வவுனியா மாவட்டத்தில் சல பகுதிகளிலும் பாதீனியம் காணப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தில் கூடுதலான அரச திணைக்களங்களின் வளாகங்களில் அல்லது அவர்களின் ஆளூகையில் உள்ள இடங்களில் இவை காணப்படுகின்றன .அத்துடன் பிரதான வீதிகளில்சிலஇடங்களில்இருமருங்குகளி லும் காணப்படுகின்றன அதாவது (அரச திணைக்களங்களின் முன்பாகவும்
குறிப்பாக வடமாகாணசபையின் பேரவை செயலகத்தின் முன்பாக (கைதடிப்பகுதியில்) மத்திய அரசின் நேரடி ஆளூகையின் கீழுள்ள பனை அபிவிருத்தி சபை யும் அதனை சூழவுள்ள பகுதியும் (கைதடி )
யாழ் முற்றவெளிப்பகுதியில் மீன் சந்தைக்கு எதிராக உடைந்துள்ள அரங்கத்தின் பக்கங்கள் .
ஆஸ்பத்திரி வீதியில் வேம்படி வீதி சந்தி .
பருத்தித்துறை வீதி. பலாலி.வீதி..காங்கேசம்துறை வீதிகள் போன்றவற்றின் ஓரங்களிலும் பரவலாக காணப்படுகின்றது. என்பது கவனிக்கத்தக்கது.
சென்ற வருடம்இறுதிப்பகுதியில் நிலங்களில் பாதீனியத்தை இல்லாமல் அழிப்பதற்கு வடமாகாண சபையின் அரசின் விவசாய அமைச்சகம் தனது சகல திணைக்களங்களையும் பெருமெடுப்பில் முடக்கி விட்டு பணிகளை ஆரம்பித்தன .
வடமாகாண முதலமைச்சர் தலமையில் புத்தூர் நிலாவரைப் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இத்துடன்பாதீனியம் அழிக்கும் இளைஞர் படையணி ஒன்றையும் இவ்வமைச்சகம் ஆரம்பித்து நடைமுறைப்படுத்தியதுடன் பாதீனீயம் காணப்படும் இடங்களில் அது சார்ந்த விளம்பர பதாகைகளை பார்வைக்கும் பெருமெடுப்பில் வைத்தனர்.
ஆனால் அவற்றை
10% கூட அழிக்காமுடியாமல் போனது.என்பது தான் உண்மை.(இதற்குள்ளும் அரசியல் செய்யப்பட்டதாக தகவல்)
இலங்கை அரசியல் சட்டத்தில் பாதீனீயம் காணப்படும் இடத்தின் சொந்தக்காரர் அல்லது இடத்தின் ஆளூகையாளருக்கு எதிராகசட்ட (நீதிபரிபாலனத்தின் மூலம்) நடவடிக்கை மேற்கொள்ளமுடியும் .
அதாவது தண்டப்பணம் அறவீடு செய்தல் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும்
என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது நூளம்பு பெருகுமிடத்தை இனம் கணடு உறுதிப்படுத்தப்பட்டால் (கண்ணுக்கு தெரியாத)தண்டனையை பெற்றுக் கொடுக்கும் அரச அதிகாரிகளே
கண்ணுக்கு தெரியும் பாதீனீயத்தை அழிக்க ஏன் முக்கியத்துவம் வழங்குகின்றீர்கள் இல்லை. இது கவலையளிக்கின்றது .
அரசியல்வாதிகளே.அரச அதிகாரிகளே சற்று சிந்தித்துப் பாருங்கள்….
நன்றி