யாழில் இருந்து சீகிரியாவிற்கு வந்த சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் சீகிரியாவில் உள்ள பூங்காவில் அமைந்துள்ள படியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். ஊர்காவற்துறை பகுதியிலிருந்து வந்த 50 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.