டென்னிசி பகுதியை சேர்ந்த ப்ரிச்சில்லா மோர்ஸ் கடந்த 2015 ஆண்டு ஃபேஸ்புக்கில் ஒரு அதிர்ச்சியளிக்கும் படத்தை கண்டார்.

அந்த படத்தில் ஒரு காப்பகத்தில் பட்டினியல் வாடும் ஒரு பல்கேரிய குழந்தை சோகமான தோற்றத்தில் காட்சியளித்து கொண்டிருந்ததுஅப்போதே ப்ரிச்சில்லா முடிவு செய்தார், ரியான் எனும்அந்த குழந்தைக்கு தான் உதவ வேண்டும் என.

இதற்கு இவரது கணவர் டேவிட்டும் ஒப்புதல் வழங்கினார். ஏற்கனவே மெக்கென்சி எனும் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார்.

மெக்கென்சிக்கு இருதய கோளாறு இருப்பது தெரிந்தே தத்தெடுத்து வளர்த்தார் ப்ரிச்சில்லா.மெக்கென்சி போலவே குழந்தை ரியானையும் காக்க ப்ரிச்சில்லா வின் குடும்பத்தார் முயற்சி செய்தனர்

ரியானின் வாழ்க்கையை நல்ல நிலைக்கு எடுத்து செல்ல தங்களால் முடியும் என்ற நம்பிக்கை ப்ரிச்சில்லா குடும்பத்தாருக்கு இருந்தது .ப்ரிச்சில்லா ரியானை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்து ஒரு வருட காலம் ஆகிறது.

பட்டினியில் காப்பகத்தில் சாகும் தருவாயில் இருந்த ரியான் இன்று!!

இது ரியானை பல்கேரியாவில் ப்ரிச்சில்லா தத்தெடுக்கும் போது!

ரியானின் உடல் நலம் ஒவ்வொரு நிலையை கடந்து மேம்படும் போது அதை கண்டு முழு மகிழ்ச்சி அடைந்தவர்கள்.

p

ப்ரிச்சில்லா மற்றும் டேவிட்

இப்படியும் ஒருசில பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த தம்பதியினர் நல்ல உதாரணமாகும்.