யாழ். நயினாதீவில் அமைந்துள்ள நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது.

இந்த நிலையில் குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு செல்ல முயற்சித்தவர்களை கடற்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பாதுகாப்பு அங்கி அணியாததன் காரணமாகவே அவர்கள் கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், இதனால் குறித்த பக்தர்கள் நீண்ட நேரம் அந்த இடத்தில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடற்படையினரின் இந்த செயற்பாட்டால் தேர் உற்சவத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியமல் போகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வேலணைப் பிரதேச செயலாளர் மேற்கொண்ட நடவடிக்கையில் கடற்பாதை படகின் மூலம் அந்த பக்தர்கள் நயினை நாகபூசணி அம்மன் ஆலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.