மஸ்கெலியா எமிட்ன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற ஐவர், நேற்றிரவு இரவு முதல் காணாமல் போயுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருடன் இணைந்து அதிரடைப் படையினரும் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினர். லக்ஷபான வாழமலை தோட்ட முகாமையாளரின் புதல்வர் உட்பட ஐவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இவர்கள், சிவனொளிபாத மலைக்கு சென்றுவிட்டு பின்னர், எமில்டன் காட்டுக்கு போயுள்ளதாக தெரியவருகிறது. நேற்றிரவு முதல் இவர்களுடன் எவ்வித தொடர்புகளையும் ஏற்படுத்திகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பொலிஸாரும் அதிரடைப் படையினரும் மூன்று குழுக்களாக பிரிந்துச் சென்று தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.