தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் புயலின் போது மக்கள் பணிக்களுக்கு காட்டிய கரிசனை உடனடியாக களத்தில் நின்று பணியாற்றி வருகின்றமை திருநீறு திகழும் நெற்றியுடன் திகழ்கின்றமை சைவத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. எம் தாய் மொழியையும் மதத்தையும் பிரித்து பார்க்கும் மேதாவிகளுக்காக இப்பதிவை இடுகின்றோம் ஓர் மக்கள் குழுமத்தின் அடையாளத்தை பொறுத்த வரையில் மொழியும் மதமும் பிரிக்க முடியாத பண்பாட்டுக் கூறுகளே. ஒரு மக்கள் குழுமத்தினை அடிமைப்படுத்த விரும்புவோர் முதலில் சுதேச வழிபாட்டு மரபுகளிலேயே கை வைக்கின்றனர் இதனை வரலாற்றில் களப்பிரர் மொகலாயர் ஆங்கிலேயர் போன்ற அந்நியர் ஆட்சியில் தமிழர்கள் சந்தித்த மதமாற்றங்கள் சுதேச மத புறக்கணிப்பினால் ஏற்பட்ட பண்பாட்டுச் சீரழிவு நன்கு எடுத்துக் காட்டும் தயவு செய்து சந்தர்ப்பவாத நாத்திக அரசியல் வாதிகள் போன்றோ மதவெறியர்கள் போன்றோ சைவத்தையும் தமிழையும் பிரித்து பார்க்க முயலாதீர்கள் தமிழ் நாட்டை ஆதியில் ஆண்ட சேர சோழ பாண்டியர்கள் போன்று சைவத்தையும் தமிழையும் முதன்மைப்படுத்தி ஏனைய மத இன குழுமங்களை அரவணைத்து ஆட்சி செய்யும் சுதேசப் பற்றுறுதி மிக்க மனிதநேயமுள்ள செயல் வீரர்களே இன்றைய தேவையாகும் சைவத்திற்கும் தமிழுக்கும் நம் ஈழமும் தமிழகமுமே தாய் வீடு என்பதை நடுநிலை நின்று சிந்தியுங்கள் எம் தாய்மத்தை எம்மை விட்டால் யார் நேசிப்பார்கள் … பூசிப்பார்கள்.. பேணுவார்கள்… சலம் பூவோடு தூபம் மறந்தறியேன் தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்! இவ்வாறு இலங்கை சிவசேனை அமைப்பினரின் முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது.