தமிழக முதலமைச்சர் வீ. பன்னீர்ச்செல்வம், தனது ஆரம்பத்திலேயே இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாகவும், அவர்களை விடுவிக்க இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறும் தமிழக முதலமைச்சர் இந்திய பிரதமரிடம் கடிதம் மூலம் வேண்டுகொள் விடுத்துள்ளார். கடந்த வாரம் கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்த இந்திய மீனவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது