தீவகம் கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத் திறப்பு விழா 23/12/2016
கச்சதீவு புனித அந்தோனியர் ஆலயத்தின் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவானது எதிர்வரும் 23 ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
யாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலமையில் நடைபெறும் விசேட திருப்பலிப்பூசையில் இலங்கை இந்தியா பாதிரியார்கள் மற்றும் அருட்சகோதரிகளும் பங்கு மக்களும் கலந்து கொள்வார்கள் என அறியப்படுகின்றது .
இவ்வாலயத்தை இலங்கை கடற்படையின் கட்டடப் பொறியியல் பிரிவினர் அமைத்தனர் .நிதியை யாழ் மறைமாவட்ட குருபீடம் வழங்கினார்கள் .