பிரபாகரன் எதிர்பார்த்ததை அரசியலமைப்பில்

எழுதி கொடுப்பதற்கு தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

காலி யடகல ராஜமஹா விகாரையில் இன்று மாலை இடம்பெற்ற புதிய கட்டடமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம் என்ற சொல் தற்போது மிகவும் தவறாக பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இருக்கும்போது, சிறுபான்மையினருக்கு அதிகமாக சலுகைகளை வழங்கக் கூடிய வகையில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டீயள்ளார்.

பிரபாகரனின் இறுதியின் பின்னர் இந்த நாட்டில் நல்லிணக்கம் மீண்டும் ஏற்பட்டது.

ஆனால், இன்று பிரபாகரன் எதிர்பார்த்ததை அரசியலமைப்பில் எழுதி கொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது கவலையளிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.