கனடாவில் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது.சன்னி லியோன் தமிழ் படமான வடகறியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கிலும் இப்போது நடித்து வருகிறார்.பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னிலியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

2015 ல் இந்தியாவில் மிக அதிகமாக கூகுளில் தேடபட்டவர்கள் பட்டியலில் ஆபாச நடிகை சன்னி லியோன் முதல் இடத்தை பிடித்து இருந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடிகை சன்னி லியோன் அவரது சகோதரர் சந்தீப் வோராவின் திருமணத்தை சிறப்பாக நடத்தி உள்ளார்.

நடிகை சன்னி லியோனின் சகோதரர் சந்தீப் வோரா இவர் தொழில்முறை சமையல்காரராக உள்ளார். சந்தீப் சிங், கிரிஷ்மா நாயுடு என்ற பேஷன் கலைஞரை சீக்கிய முறைப்படி அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலில் திருமணம் செய்து கொண்டார். மணமக்களை நடிகை சன்னி லியோன் வாழ்த்தினார். சகோதரன் திருமண விழாவில் கலந்து கொண்ட போட்டக்களை எடுத்து சன்னி லியோன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.