மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில்  உள்ள SHIRAZ MIRZA COMMUNITY HALL 76A COOMBE ROAD, NORBITON, KINGSTON UPON THAMES KT2 7AZ எனும் இடத்தில்  24 ம் திகதி டிசம்பர் 2016 அன்று பிற்பகல் 5:00 மணியில் இருந்து இரவு 8:00 மணிரை இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதீகளாக திருவாலர் n.கந்தசாமி(CHRD)அவர்களும் திருவாலர் s.ரவீந்திரன்(மனித உரிமைகள்  சட்டத்தரனி,TRRO )அவர்களும்  கலந்துகாெள்ள உள்ளனர்.

 

நல்லிணக்க செயற்பாடுகள் விடயத்தில் அரசாங்கம் வழங்கிய பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. அவற்றில்  முக்கியமாக  பயங்கரவாத டைச்   சட்டம் நீக்கப்பட வேண்டும்.  சர்வதே தரத்துடன் கூடிய சட்டம் வரவேண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்து இருந்தும் அமுல்ப்படுத்தப்படவில்லை.

 

மலையகத் தமிழர்களின் காணியுரிமை, வீட்டுரிமை என்பன இன்றுவரை அங்கீகரிக்கப்படாமை, தொழில் உரிமைகள், பெண் தொழிலாளர் உரிமைகள், அவர்களின் பாதுகாப்பு, தொழில்சார் நலன்களின் பாதுகாப்பு என்பன மீறப்படுவதன் மூலம் அவர்களின் குடியியில் உரிமைகள் மீறப்படுகின்றன. ஏழு தலைமுறையாக நிரந்தர சம்பளம் ஒன்றைத் தீர்மானிக்கப்படாமை பாரதூரமான பொருளாதார உரிமை மீறலாகும்.

இலங்கையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறையை சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் நிறுவவேண்டும்.  இவ்வாறான மனித உரிமை மீறல்கள் தாெடர்பாக இந்நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு அனைரையும் கலந்து சிறப்பிக்குமாறு லெ.தெய்வேந்திரன் TIC சார்பாக தெரிவித்துள்ளார்.