கடந்த மாதம் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட

தையிட்டி கணையவில் பிள்ளையார் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் உள்ளே விக்கிரங்கள் வைப்பதற் கான. புதிய பீடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் ஆலயத்தை சூழ இருந்த பற்றைகள் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வெளியாக காட்சியளிக்கின்றது. முன்பு இப்பகுதி விடுவிக்கும் போது ஆலயத்தை சூழ பற்றைகள் காணப்பட்டதுடன் உள்ளே செல்ல முடியாத நிலையிருந்தது. பின்னர் இராணுவத்தினரிடம் அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்ட நிலையில் அவர்கள் பக்கோ இயந்திரம் மூலம் பற்றைகளை அகற்றி கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.