நெடுந்தீவிலுள்ள தமிழ் மன்னன் வெடியரசன் ஆட்சி செய்த வெடியரசன் கோட்டை அழிந்த நிலையிலுள்ள கற்கோட்டை இன்றும் தமிழனின் வீரத்தை பறைசாற்றுகின்றது.
ஆம் நெடுந்தீவுபிரதேசமானது போத்துக்கேயர் காலம் தொட்டு ஆங்கிலேயர் காலம் வரையான அன்னியர் ஆதிக்கத்திற்கு முன்னர் ஒரு சுதந்திர தனி இராசதானி நாடாகவே விளங்கியது. விஷ்ணுவர்த்தனன் வெடியரசன் என்பதே வெடியரசனின் இயற் பெயராகும்.அவரால் கட்டப்பட்ட கற்கோட்டை நெடுந்தீவின் வட மேற்குப்பகுதியில் கோட்டைக்காடு என்னுமிடத்தில் அழிவடைந்த நிலையில் இன்றும் காணலாம்.
நெடுந்திவை போர்த்தீகீசர் தொடக்கம் ஆங்கிலேயர் வரைக்கும் தமது ஆக்கிரமிப்பின் ஆட்சிக்காலங்களில் முக்கியத்துவம் மிக்கஇடங்களாக பயன்படுத்தி வந்தனர் .இதற்கான வரலாற்று ஆதாரங்கள் அழிவற்ற நிலையிலும் காட்சியளிக்கின்றன.
இவ்விடத்தை ஆங்கிலேயர் குதிரைகனள வளர்க்கும் லயங்களாக பயன்படுத்தப்பட்டன.

இதனால் இன்றும் அக்காலத்தின் குதிரைகளின் இனங்கள் நெடுந்தீவில் காணலாம். இப்பகுதி சுற்றுலா மையங்களில் ஒன்றாக உள்ளது.
இங்கு குடியிருக்கும் மக்கள் தமது நிலங்களுக்கான எல்லையாக வேலியாக கடலில் வளரும் பவளப்பாறையான முருககல்லை அடுக்கி பயன் படுத்துகின்றனர் .இது பார்ப்பதற்கு அழகாக உள்ளது என்பது சிறப்பம்சமாகும்.

நெடுந்தீவானது இரண்டு மதங்களையுடைய மக்கள் வாழ்ந்து வருவதுடன் கடற்றொழிலும் விவசாயமும் பிரதான தொழிலாக கொண்ட மக்கள் வாழ்கின்றனர்.. இத்தீவானது கல்வியிலும் சிறந்த சமூகத்தை கொண்டது.
நெடுந்தீவு தமிழர் வீர வரலாற்றில் தடம் பதித்த புண்ணிய பூமியாகும்.
இப் புண்ணிய பூமியின் வரலாற்று தடங்களை அழிவிலிருந்து காப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்..