செக்குடியரசிடம் பெற்ற கடனை மதுபானமாக வழங்கும் கியூபா..!

பனிப்போர் காலம் தொட்டே கியூபாவானது உலகில் சிறப்புமிகு ரம் மதுபான தயாரிப்பை கொண்டு தனது நாட்டு கடன்களை அடைத்து வருகின்றது.

இதனடிப்படையில் செக் குடியரசு நாட்டிடம் பெற்ற பெருந்தொகை கடனையும் ரம் மதுபானத்தை கொண்டு செலுத்துவதற்கு தயாராகியுள்ளது.

இதுபற்றி செக்குடியரசின் நிதிஅயமைச்சு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது,

கியூபா செக்குடியரசு என்பன கம்யூனிச வலய நாடுகளாக இருந்த காலத்திலிருந்தே கியூபாவானது சுமார் 276 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.

அக்கடன் தொகையை கியூபா எமது நாட்டுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

செக் குடியரசானது கடந்த வருடம் மாத்திரம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கியூபாவிடம் இருந்து ரம் மதுபானங்களை இறக்குமதி செய்துள்ளது.

இதனடிப்படையில் மீதமுள்ள கடன் தொகைக்கும் ரம் மதுபானத்தை இறக்குமதி செய்ய செக்குடியரசு தீர்மானித்துள்ளது.

செக்குடியரசிற்கு பொருட்களாகவே கடன் திரும்பி கொடுக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பும் வடகொரியா செலுத்த

வேண்டிய 10 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அந்நாடு ஜிங்செங் மூலிகை பொருட்களை

கொடுத்தே அக்கடனை அடைத்தது.

செக் குடியரசில் ரம்மிற்கான தேவைபாடுகள் அதிகமாகவே இருக்கின்ற போது கடனை பணமாக வழங்கினால் சிறப்பானதாக இருக்கும் எனவும் செக்குடியரசின் நிதியமைச்சு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.