ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 30/1 தீர்மானம் தொடர்பாகவும் ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு தொடர்பிலும் காத்திரமான கலந்துரையாடல் பிரித்தானியப் பாராளுமன்ற பிரதி நிதி Siobhain McDonagh கடந்த 12ம் திகதி டிசம்பர் மாதம் 2016 பெற்றது.

இலங்கையில் மாறி மாறி வரும் ஆட்சியாளர்களின் கீழ் தமிழ் மக்கள் படுகொலைகளை எதிர்நோக்கிய வண்ணமே வருகின்றனர். அரச பயங்கரவாதம் தமிழர்களை அடக்கி ஆள்வதற்கு படுகொலைகள் மூலம் தொடர்ந்து முயற்சித்த வண்ணமே உள்ளன. ஆயினும் இனிமேலும் தமிழர்கள் மீதான படுகொலைகளை அனுமதிக்க முடியாது என்று வலுறுத்தினர்’ இந்த சந்திப்பில் நாடு கடந்த அரசாங்க பிரதிநிதிகளான சொக்கலிங்கம் யோகலிங்கம் , விமலா கரன், தெய்வேந்திரன், கார்திக், சிவதிபன், பகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.