பண்ணைப்பகுதியில் தீவகம் பிரதான வீதியில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பண்ணைக்கடலில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் தமது வலைகளை வீதிகளில் உலரப் போடுகின்றனர். இச் செயற்பாட்டால் கடலிலுள்ள கழிவுகள் வலைகளுடன் சேர்ந்து வதிகளுக்கு வருகின்றன.
இவ் வலைகளை வீதிகளில் உலரப் போடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகின்றன.
இவ்விடையம் தொடர்பாக 2016/12/14 அன்று நடைபெற்ற வேலணைப் பிரதேச ருங்கிணைப்பு மீளாய்வு கூட்டத்தில்.கலந்துரையாடப்பட்டது. அதாவது இக் கடற்பகுதியில் தொழிலில் ஈடுபடுபவர்கள் யாழ்ப்பாணப் பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர்களே.என்பதுடன் அவர்களே இவ் முறைகேடான வேலைகளைச் செய்கின்றனர் என்று தீவகத்தின் கடற்றொழிலாளர்களின் சங்க உறுப்பினர்கள்குற்றம் சாட்டை தெரிவித்தனர்
மேலும் வீதிகளில் வலைகளை உலரவிடுவது சட்டப்படி தண்டணைக்குரிய குற்றம் என்பதை கூட்டத்தில் கலந்து கொண்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி கூறியதுடன் இவற்றை கட்டுப்படுத்த காவல்துறையினர் உதவி செய்ய வேண்டுமென இணைத்தலைவரான பாராளூமன்ற உறுப்பினர் திரு சி.சிறிதரன் அவர்களிடம் வேண்டுகோளை முன்வைத்தார்
இதற்கு உடனடியாக தீர்வு காணும் பொருட்டு
அக்கூட்டத்தில் கலநது கொண்ட ஊர்காவற்துறை காவல்துறை அதிகாரிக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதாவது வடமாகாணசபை உறுப்பினர் திரு விந்தன் கனகரத்தினம் அவர்கள் காவல்த்துறை அதிகாரிக்கு சிங்கள மொழியில் தெரியப்படுத்தினார்.அதற்கு காவல்துறை அதிகாரி தமக்கு முறைப்பாடு கிடைத்தால் தாம் சட்டநடவடிக்கை எடுப்பதாகவும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறினார்.
மேலும் இவ்விடையம் பேச்சளவிலும் எழுத்துருவிலுமிமட்டும் இருக்காமல்.செயல்வடிவி்ல்இருக்க வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.


மேலும் இவ் விடையத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் கூடிய கவனம் செலுத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதன் மூலம் வீதிவிபத்து அனார்த்தங்களை தடுக்க முடியும்.கடற்்றொழிலாளர்களின் சங்கங்களும் இவ்விடையத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் இவற்றை தடுக்கலாம்.