தனுஷின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிய படம் ’விசாரணை’. பிப்ரவரி மாதம் 5-ம் தேதி ரிலீஸான இந்த படம், தமிழ்நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

சிறந்தபடம், சிறந்த துணைநடிகர், சிறந்த படத்தொகுப்பு என மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்தப் படம், ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

வெளிநாட்டு திரைப்படம் என்கிற பிரிவிற்காக பரிந்துரைக்கப்பட்ட விசாரணை, விருது பட்டியலில் இடம் பெறவில்லை. ஆஸி, கனடா என 9 நாட்டின் படங்கள் இடம் பெற்றிருந்த நிலையில் விசாரணை படம் ஆஸ்கருக்கு தேர்வாகவில்லை. இது தமிழ் ரசிகர்களுக்கு பெரிதும் ஏமாற்றத்தை அளிக்கும் செய்தி..!