யாழ் சாவகச்சேரி சங்கத்தானையில் கோர விபத்துபத்து பேர் பலி ..
யாழ்ப்பாணம் சங்கத்தானையில் இன்று மதியம் 12.50 மணியளவில் தென்பகுதியில் இருந்து வந்த கயேஸ் வான் இலங்கை போக்கு வரத்துசபை பேரூந்துடன் நேருக்கு நேர் மோதியதில் வானில் இருந்த 12 பேரில்10 பேர் ஸ்தலத்திலேயே உடல் சிதறி பலியானதாக அறிய முடிகிறது .

அத்துடன் மற்றையவர்கள் கவலைக்கிடமான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்களும் காயப்படடவர்களும் சிங்கள சகோதரர்கள் என அறியமுடிகிறது . இரண்டு வாகனங்களும் வேகம் கூடியதாக பயணித்தமையே இவ் விபத்துக்கு காரணம் என அறியப்படுகிின்றது.