விஷால் நடித்த ‘கத்திசண்டை’ அடுத்த வாரம் திரைக்குவருகிறது

விஷால் கதாநாயகனாகவும் தமன்னா கதாநாயகியாகவும் நடித்துவரும் படம் ‘கத்திசண்டை’ இந்த படம் எதிர்வரும் 23 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள்.

மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு நடிக்கிறார் மற்றும் சௌந்தர்ராஜன், மதன்பாப், தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், சின்னி ஜெயயந்த், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள்  நடிக்கிறார்கள்.

கம்ரஷியல் மற்றும் கொமெடி கலந்து இந்த படத்தை உருவாக்கி வருகின்றது. விஷால் – வடிவேலு, சூரி மூவரது காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க  சிரிக்க வைக்கும்.

நிச்சயம் இந்த படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

படத்தின் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா எழுதி பாடிய , விஷால் – தமன்னா நடிப்பில் உருவான பாடலான  “ நான் கொஞ்சம் கருப்புதான் அனாலும் நெருப்புதான் “   பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.