தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கான பயணச் சீட்டை கட்டாயம் வழங்க வேண்டும் எனவும் அவ்வாறு வழங்காத பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்தின் போது பயணிகள் தங்களுக்கான பயணச் சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டியது அவர்களின் உரிமை எனவும் அதற்கான பயணச் சீட்டை வழங்குவது பேருந்து நடத்துனரிகளின் கடமை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் தனியார் பேருந்து சங்கங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.