ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 30/1 தீர்மானம் தொடர்பாகவும் ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு தொடர்பிலும் காத்திரமான கலந்துரையாடல் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் கடந்த 5ம் திகதி டிசம்பர் மாலை 7.00 தொடக்கம் 9.00 மணிவரை நடைபெற்றது.

இந்நிகழ்வில் Senior Vice Chair – APPG Tamil Hon. Siobhain McDonagh MP ( Mitcham and Morden ) – Labour,
Hon. Anne McLaughlin MP Political Education Convener – Glasgow North East – Scottish National Party (SNP) ஆகியோர் கலந்து ஆதரவளித்ததுடன் சிறப்புரையாற்றினர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதவிப்பிரதமரும் மனிதவளத்திற்கான அமைச்சருமான திரு.தவேந்திரா வெளிவிவகாரத்துறை அமைச்சர் திரு.மாணிக்கவாசகர் மனித உரிமைகள் அமைச்சர் திரு.மணிவண்ணன் விளையாட்டுத்துறை, சமுகநல பிரதி அமைச்சர் திரு.யோகலிங்கம் ஆகியோர் கருத்துரையாற்றியதுடன் அரங்கில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்தனர்.

இதன் ஒரு பகுதியாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பட்டாளர்களான முகுந்தன் , சிவகாந்தன், சோபனா ஆகியோர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமை அமைச்சர் திரு.மணிவண்ணன் விளையாட்டுத்துறை, சமுகநல பிரதி அமைச்சர் திரு.யோகலிங்கம் ஆகியோருடன் இணைந்து
தொடர்ந்து பிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர் சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றார்

தமிழினப்படுகொலைக்கு நீதிகோரும் செயல்முனைப்பில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களது தோழமையினைத் திரட்டும் சந்திப்புக்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.

நடந்தேறிய பாரிய மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் இருந்து தவறும் சிறிலங்காவை அம்பலப்படுத்துவதிலும், சர்வதேசத்திடம் இலங்கை கூறிய வாக்குறுதிகளை இன்னும் நடைமுறை படுத்தவில்லை என்பதையும் பிரித்தானியாவுக்கு உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு
சுட்டிக்காட்டும் வகையிலும் இசந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

2017ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு இது ஒரு பாரிய அழுத்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இழந்த ஒவ்வொரு உயிர்களுக்கு ஒவ்வொரு மரம் எனும் தொனிப்பொருளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நீதிக்கான மரநடுகைத் திட்டத்தின் ஓர் அங்கமாக இழந்த உயிர்களை நினைவேந்தும் மரக்கன்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கையளிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.