பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் தமிழ்ச்சோலைப் பள்ளி மாணவர்களின்  முத்தமிழ் கலையின் வெளிப்பாடுகளை உள்ளடக்கிய முத்தமிழ் விழா நிகழ்வு பாரிசின் புறநகர்ப் பகுதியான சவினி லுத் தொம் பகுதியில் 17.12.2016 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இன்னியம் வாத்திய அணிவகுப்புடன் ஆரம்பமான நிகழ்வில் தமிழ்ச்சோலை மாணவர்கள் தமது கலைப் படைப்புக்களை மிகவும் திறப்பட வெளிப்படுத்தியிருந்தனர். முக்கிய பிரமுகர்களின் சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தன.