யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்காக விசேட விசாரணை பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்காக பல பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் சாவகச்சேரி பிரதேசத்தில் மறைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சதீஷ் என்ற அடையாளப்படுத்தும் சந்தேகநபரே இவ்வாறு மறைந்திருப்பதாக கூறப்படுகின்றது. அவரை கைது செய்யும் நோக்கில் சாவகச்சேரியல் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சதீஷ் என்பவரின் மூத்த சகோதரர் மற்றும் மேலும் ஒரு உறவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.