சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்

பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டுச் சென்றுவிட்டது வர்தா புயல்.

நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் போதுமான அளவு இல்லை. இன்னும் நிவாரணப் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை.

இந்நிலையில் பிரதமர் மோடியை இன்று சந்தித்தார் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்.

அப்போது நிவாரணப் பணிகளுக்காக 22ஆயிரத்து 573 கோடி நிதி கேட்டு பிரதமரிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.அதே நேரம் அதிமுகவில் முதலமைச்சர் பதவிக்கான போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று ஆளுநரை சந்தித்த பன்னீர் செல்வம் இன்று பிரதமரை சந்தித்து இருப்பது வேறு கோணங்களிலும் பார்க்கப்படுகிறது.

ஆளுநரை பன்னீர் செல்வம் சந்தித்த போது, எந்த சூழலிலும் நீங்கள் தான் முதலமைச்சர் என ஆளுநர் கூறியதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.