கிளிநொச்சி மாவட்ட சமூகசேவைகள் தினைக்களம் ஊடாக தொழிற்பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்ய

பயனாளிகளுக்கு இன்று தொழிலுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் தவவேந்திரன் தலைமையில் காலை 10.30 மணிக்கு சமூக சேவைகள் திணைக்கள மண்டபத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக காவேரிக்காலமன்ற பணிப்பாளார் வணபிதா. ஜோசுவா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். வடக்கு மாகாண சமூகசேவைகள் திணைகளத்தின் நிதிபங்களுப்புடன் சமூகசேவைகள் தினைக்களம் ஊடாக வீட்டு மின்னிப்பு வாகனத்திருத்துனர் மற்றும் தையல் பயிற்சி நெறிகளை பெற்றவர்களுக்கே இந்த உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தொழிற்பயிற்சி உத்தியோகத்தர் ரமேஸ் மாற்றுவலுடையோர் சங்கத்தலைவர் நேசன் சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் பயனாளிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.