வவுனியா – குருமன்காடு சந்திக்கு அருகே இன்று (20) 2.45 மணியளவில் இரண்டு மோட்டார்

சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளின் சாரதி தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த பிளசர் ரக மோட்டார் சைக்கிள் வீதியின் மறுபக்கத்திற்கு மாற முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.இவ்விபத்தில் பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எனினும் விபத்துக்குள்ளான மற்றைய மோட்டார் சைக்கிளின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.