முன்னொரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வடக்கிலும்,

கிழக்கிலும் அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் தமிழீழ காவல்துறையினர் நிர்வாகத்தை செயற்படுத்தியிருந்தனர்.

1991ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி மிக குறைந்த வளங்களோடும், மட்டுப்படுத்தப்பட்ட ஆள் பலத்துடனும், யாழ்ப்பாணத்தில் இயங்கத் தொடங்கிய காவல் துறையின் சேவை பின்னர் படிப்படியாக ஏனைய இடங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தனி நாட்டுக்கான அலகுகள் பலவற்றை ஏற்படுத்தி காட்டியதில் சிறப்பு கொண்டவை.

காவல்துறை, சட்டத்துறை, நீதித்துறை, நிதித்துறை, சிவில் நிர்வாக சேவை, ஆயப்பகுதி போன்ற பல கட்டமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்தின் கீழ் இன்றி தனித்து செயற்பட்டது.
அத்துடன், தனியரசுக் கட்டுமானமொன்று இலங்கையின் வடக்கு – கிழக்கில் இருப்பதை ஒத்துக்கொள்வதற்கு இக்கட்டமைப்புக்களும், அவற்றின் செயற்பாடுகளும் முக்கிய காரணமாக இருந்துள்ளது.

இந்நிலையில் 2004ஆம் ஆண்டு இலங்கையில் சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதன் போது கடமையில் இருந்த காவல் துறையினரும் கொல்லப்பட்டனர்.

முல்லைத்தீவு சுனாமி ஆழிப்பேரலை நினைவாலயத்தில் ஆழிப்பேரலையில் காவுகொள்ளப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட பொதுமக்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழீழ காவற்துறையினரின் பெயர்களும் பதிவிடப்பட்டுள்ளன. அவை இன்னமும் அழிந்து விடாமல் தமிழீழ காவல்துறையினரை மீள நினைவுப்படுத்தும் வகையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.