புத்தளம் சிலாபம் இரணவிலவில் 1993ம் ஆண்டு தொடக்கம்வொய்ஸ் ஓப் அமெரிக்கா (அமெரிக்காவின் குரல்) என்ற பெயரில் அமெரிக்கா நிறுவனம் வானெலி நிலையத்தை நடாத்தி வருகின்றது.யாவரும் அறிந்ததே.
இலங்கை அரசினால் இவ் வானெலி நிலையத்திற்கான பரிவர்த்தன கோபுரம் அ
மைப்பதற்கு இலங்கை அரசு(ஜே.ஆர்அரசு) அவ்நிறுவனத்திற்கு அனுமதியளித்தது. இதனால் இந்தியா இலங்கை அரசை பயமுறுத்துவதற்காக ஈழவிடுதலையை கையிலெடுத்து தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து பகடக்காய் விளையாடியது என்பதும் உண்மை)
எனினும் இவ் வானொலி நிறுவனத்தின் கட்டுமானபபணிகள் 1993ம் ஆண்டேஆரம்பிக்கப்பட்டன.
ஆரப்பத்தில் இவ் வானொலி நிலைய வளாகமானது வெறும் 920 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட பலத்த பாதுகாப்பை கொண்ட இராஜதந்திர விலக்குரிமை பெற்ற பகுதியாக இருக்குமெனஅறிவிக்கப்பட்டது.
இருந்தும் மக்கள் போராட்டம் நடத்தியதன் பயனாக 520 ஏக்கர் நிலமாக குறைக்கப்பட்டது. இருந்தும் இலங்கையர் யாரும் இப்பகுதிக்குள் நுளைவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
இரணவிலவில் அமைக்கப்பட்ட வானொலி பரிவர்த்தன கோபுரத்தினைப் பயன்படுத்தி இந்து சமூத்திர பிராந்தியத்தின் இராணுவத் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றது எனவும் இரகசிய விமான ஓடுபாதை உள்ளதாக தகவல்கள முன்னர் அடிபட்டன.இதனால் இலங்கையிலும் விட இநதியாவின்பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வந்ததாக தகவல்கள் அடிபட்டன.
தற்போது இவ் வானொலி நிலையத்தை மூடுவதற்கு அமெரிக்காமுடிவு செய்துள்ளதாக தகவல்கள் அடிபடுகின்றன.
இத்தகவலை உறுதி செய்யும் வகையில் இலங்கையின் அமைச்சர் திரு மலிக் சமர விக்கிரம பேசியுள்ளார்.
இதேவேளை இவ் வானொலி நிலையம் அமைந்த பகுதியுடன் கூடிய நிலத்துடன் சேர்த்து 5000 ஏக்கர் நிலப்பரப்பை தருமாறு சீன நாடு கோரிக்கை விடுத்துளதாம். இக்கோரிக்கையை இலங்கை அரசின் அமைச்சர் ஒருவர் மூலம்விடுக்கப்பட்டதாக தகவல்.
இரணவிலப் பகுதியில் வான் அலைகளைப் பரிமாற்றம் செய்யும் மையப்பகுதி இருப்பதால் இப்பிரதேசத்தை கைப்பற்றுவதற்கு சீனா முயற்சிக்கின்றது.
அமெரிக்கா இங்கு காலூண்றியபோது இந்தியா இலங்கைக்கு பல்வேறு அழுத்தங்களை பிரயோகிக்கப்பட்டது. இருப்பினும் சீனாஇந்தியாவின் எதிரி நாடாக இருப்பதால் சீனா இப்பகுதியில் காலூண்றினால்இந்தியா தனது பாதுகாப்புக்காக எதையும் செய்ய தயங்காது.என்பதே உண்மை .