மூன்று நாட்களாக உணவின்றி சுவரின் இடுக்குக்குள் சிக்கி தவித்த சிறுவன் ஒருவன் பிரதேச வாசிகளால் மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவமொன்று நைஜிரியாவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

நைஜிரியாவின் ஒன்டோ பிராந்தியத்தில் அமைந்துள்ள ஒடுடூவா பகுதியில் வசித்து வந்த அதுர்காபெமி சகா என்ற 12 வயதுடைய ஏழைச் சிறுவன் தனது வீட்டின் மதிலில் ஏறி விளையாடியுள்ளான்.

இந்நிலையில் குறித்த சிறுவன் மதிலின் 12 அங்குலமான இடுக்கு பகுதியில் விழுந்துள்ளான்.

குறித்த சிறுவன் முடுக்கு பகுதியிலிருந்து தன்னை காப்பாற்றுமாறு கூக்குரல் எழுப்பிய போதும் பிரதேசவாசிகள் ஏதோ அமானுஷ்சிய குரல் என நினைத்து கேட்டும் கேட்காமல் சென்றுள்ளனர்.

மூன்று நாட்கள் கடந்தும் தொடர்ச்சியாக அபாய குரல் கேட்கப்படுதை சந்தேகித்த பிரதேச வாசிகள்  அபாய குரல் கேட்கப்படும் இடத்தை ஆராய்ந்து பார்த்துள்ளனர்.