வவுனியாவுக்கு  ​கொண்டுச்  செல்லப்பட்டு விநி​யோகிக்க தயாரான நிலையில் இருந்த ​​வெடிமருந்து தொகையுடன் சந்தேகநபர்கள் 3 பேர், இன்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அனுமதிப்பத்திரம் இன்றி மதவாச்சியில் இருந்து, முச்சக்கரவண்டியில் இந்த வெடி ​பொருட்கள் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகிப்பதற்காக இவர்கள் இந்த வெடிபொருளை கொண்டுச் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.