தமிழர்களையோ, முஸ்லிம்களையோ அடக்கி ஆள்வதற்கு

நாம் நினைக்கவில்லை அதேவேளை அனைவரும் இந்த நாட்டில் இனஇ மத பேதமின்றி ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு நேற்று புதன்கிழமை (21) விஜயம் செய்த நீதி அமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜேயதாஸ ராஜபக்ஷ மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமண ரத்ன தேரர் மற்றும் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர்; ஞானசார தேரர் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிவே அவர் இவ்வாறு தெரிவித்தார்;.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இம் மாகாணத்தில் சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் நாம் நீதி அமைச்சருக்கும் அரசாங்கத்துக்கும்; எடுத்துக் கூறியுள்ளோம்.

அதேவேளை நாட்டில் அனைத்து மக்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன என்பதையும் நாம் அறிவோம் யுத்தத்துக்கு முன்னர் இம் மாவட்டத்தில் வாழ்ந்த சிங்களக் குடும்பங்கள் தற்போது மீளக்குடியேறுவதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றன.

தற்போது இங்கு அவர்களால் வாக்களிக்கும் உரிமை கூட இல்லை எனவே கிழக்கு மாகாணத்தில் சிங்களப் பௌத்த மக்கள் எதிர்நோக்;கும் பிரச்சினைகள் தீர்;த்துவைக்கப்பட வேண்டும். அவர்கள் யுத்தத்துக்கு முன்னர் வசித்த பகுதிகளில் மீளக்குடியேற வசதி செய்யப்பட வேண்டும்.

இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பாடுபட்டு வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகப் பாடுபடுகின்றார். இந்த நல்லிணக்க முயற்சிக்கு நாம் ஆதரவு தெரிவிக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.