அம்பாரை மாவட்டம் வட்டமடு மேச்சல் தரைப் பகுதிக்குள்

வனபரிபாலன திணைக்களம் கால்நடை வளர்பாளர்கள் உட்பிரவேசிக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு மாவட்ட அரசாங்க அதிபரினால் கால்நடை வளர்பாளர்கள மட்டுப்படுத்தப்பட்ட அளவில் செல்வதற்கு அனுமதிவழங்கி தடை உத்தரவை நேற்று செவ்வாய்கிழமை (20) நீக்கியள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் சங்கத் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான எஸ். புஸ்பராசா தெரிவித்தார்.

குறித்த மேச்சல் தரை கால்நடைகளுக்காக ஓதுக்கப்பட்போதும் அதனுள் கால்நடையாளர்கள் உட்பிரவேசிக்க வனபரிபாலன திணைக்களம் தடைவிதித்த கால்நடையாளர்கள் சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜயர்படுத்தினர் இதனால் அப் பகுயிலிலுள்ள சுமார் 36 ஆயிரம் மாடுகள் பாதுகாபற்ற நிலையினையடுத்து கால்நடை வளர்பாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறை மாவட்ட வனபரிபாலன திணைக்களத்தை நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நூற்றுக்கு மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து முற்றுகைப் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு கிழக்கு மாகாண நீதிக்கான கிரிந்தல குணனந்த தேரே, வடகிழக்கு மாகாண சிங்கள அமைப்பின் தலைவர் சேனாதிபதியே அனந்த தேரர் கொண்ட குழவினர் சென்று முற்றுகைப் போராட்டம் தொடர்பாக கெட்டறிந்து கால்நடைகளின் நிலை தொடர்பாக வனபரிபாலன மாவட்ட பணிப்பாளர் முனசிங்காவிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நிலையில் அது வெற்றியளிக்காவில்லை
இந்த நிலையில் இத தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்திற்கு தேர்கள் மற்றம் கால்நடை வளர்பாளர்கள் கொண்ட குழுவினர் சென்று மாவட்ட அரசாங்க அதிபர் சந்தித்து பேச்சவார்த்தையில் ஈடுபட்டனர் இதனையடுத்து அரசாங்க அதிபர் வனபிபாலன திணைக்கள பணிப்பாளர் மேயர் ஜெனரலுடன் தொடர்ப கொண்டு நிலமையை தெளிவுபடுத்தி நீதிமன்ற வழக்கு முடியம்வரை கால்நடைகளின் நிலமை மற்றும் அதன் தேவைகளை கருத்தில் கொண்டு கால்நடை வளர்பாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சென்று கால்நடைகளை மேய்பதற்கு அனுமதி வழங்கி தடை உத்தரவை நீக்கியதாக உறுதிமொழி வழங்கியதையடுத்து பிற்பகல் 4 மணிவரை முற்றகை போராட்டத்தில் ஈடுபட்ட கால்நடையாளர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்;

இதேவேளை அம்பாரை மாவட்டத்தில் கால்நடைகளுக்கான ஒரே ஒரு மேச்சல் தரையாக 1976 ம் ஆண்டு அரசாங்கத்தினால் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள வட்டமடு பிரதேசத்தில் 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு மேச்சல்தரைக்காக ஒதுக்கப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு; கால்நடையாளர்கள் அதனுள் கால்நடைகளை வளர்த்துவந்தனர் பின்னர் நாட்டில் ஏற்பட்ட யுத்ததினால் கால்நடையாளர்கள் அங்கு செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு இதனை பயன்படுத்தி விவசாயிகள் காணிச் சட்டத்திற்கு முறனாக போலி தற்காலிக காணிப்பத்திரத்தை அரசியல் அதிகாரத்தினால் பெற்று காடுகளை அழித்து வேளாண்மை செய்கைகளை செய்துள்ளனர்.

இவ் மேச்சல் தரை விவகாரம் கடந்த 14 வரடங்களுக்க மேலாக இடம்பெற்றவருவதுடன் இது தொடர்பாக கொழும்பு உயர்நீதிமன்றில் வழக்கு இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.