நான் த்ரிஷாவை காதலிக்கவில்லை.

என் வாழ்க்கை அசாதாரணமானது என தெலுங்கு நடிகர் ராணா தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் ராணாவும், த்ரிஷாவும் காதலிப்பதாக பல காலமாக பேசப்பட்டது. த்ரிஷாவின் திருமணம் நின்று போன பிறகு மீண்டும் அந்த பேச்சு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து முதல் முறையாக ராணா கூறுகையில்,

த்ரிஷா

எனக்கும், த்ரிஷாவுக்கும் இடையே எப்பொழுதுமே காதல் இல்லை. நாங்கள் காதலிப்பதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை. நான் எந்த பெண்ணையும் காதலிக்கவில்லை.

படம்

எனக்கு சினிமாவை தவிர வேறு சிந்தனை இல்லை. என் வாழ்க்கை அசாதாரணமானது. நான் படப்பிடிப்புக்காக மாதக் கணக்கில் வெளியூர்கள், வெளிநாடுகளில் இருப்பேன்.

மனைவி

என் அசாதாரண வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளக் கூடிய பெண் இருந்தால் திருமணம் செய்வேன். இல்லை என்றால் திருமணம் செய்ய மாட்டேன். அதற்காக திருமணமே செய்ய மாட்டேன் என்று இல்லை. செட்டிலான பிறகு செய்வேன் என்றார் ராணா.

காதல்

ராணா யாரையுமே காதலிக்கவில்லை என்கிறார். ஆனால் அவருடன் த்ரிஷா மட்டும் அல்ல பல நடிகைகளின் பெயர்கள் அவ்வப்போது அடிபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.