பாலிவுட் நடிகை க்ரிட்டி சனோன் 2000 ரூபாய்

நோட்டுகளால் ஆன உடை அணிந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. மகேஷ் பாபுவின் நே ஒக்கடினே படம் மூலம் நடிகையானார் க்ரிட்டி சனோன். தற்போது அவர் பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். ஷாருக்கானின் தில்வாலே படத்தில் நடித்தவர்.
இந்நிலையில் க்ரிட்டி சர்ச்சை ஒன்றில் சிக்கினார்.

ரூபாய் நோட்டு

கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து வைத்தார்.

ரூபாய் நோட்டு உடை

ஏடிஎம்களில் வரிசையில் நின்று பணம் எடுப்பதற்குள் அவரவருக்கு கண்ணை கட்டிக் கொண்டு வருகிறது. இந்நிலையில் க்ரிட்டி 2000 ரூபாய் நோட்டுகளால் ஆன உடை அணிந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.

விமர்சனம்

ரூபாய் நோட்டிலா உடை அணிவது என்று அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் ஆளாளுக்கு க்ரிட்டி சனோனை சமூக வலைதளங்களில் வசை பாடத் துவங்கினர்.

நான் இல்லை

நான் ரூபாய் நோட்டுகளில் உடை அணியவில்லை. அது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என்று க்ரிட்டி சனோன் பதறியடித்து விளக்கம் அளித்துள்ளார்.