திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக,

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று திருப்பதி சென்றடைந்துள்ளார்.

கொழும்பில் இருந்து சென்னை வந்த சிறிலங்கா பிரதமர் அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலம் ரேனிகுண்டா விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

ரேனிகுண்டாவில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் ஆலயத்துக்கு அவர் நேற்று மமாலை தரைவழியாகப் பயணம் செய்தார்.

நேற்றிரவு திருப்பதியில் தங்கியிருந்த சிறிலங்கா பிரதமர் இன்று அதிகாலையில் ஏழுமலையான் ஆலயத்தில் தரிசனம் செய்த பின்னர், இன்று மீண்டும் சென்னை வழியாக கொழும்பு திரும்பவுள்ளார்.

சிறிலங்கா பிரதமருடன், அவரது மனைவி மற்றும் இரு அதிகாரிகளும் திருப்பதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சிறிலங்கா பிரதமரின் வருகையை முன்னிட்டு திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.