தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற வேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தமிழ் மக்கள் அரசியலில் விழிப்படைய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கல்லடியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கு சிங்கள மக்களினதும், சிங்கள மதத் தலைவர்களினதும் ஆதரவு வெளிப்படையாகவே இருக்கின்றது.

இந்நிலையில், நல்ல ஒரு தலைமைத்துவத்தின் கீழ் வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்றால் சிங்கள மக்களும், சிங்கள மதத் தலைவர்களும் அதனை ஏற்றுக்கொள்வார்கள்.

இவ்வாறான நிலையில், வடக்கு கிழக்கில் தமிழ் மக்களினது பிரதிநிதித்துவம் முழுமையானதாக இருக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.